சிறைக்கைதிகள் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள ஆண், பெண் சிறைக்கைதிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இன்று ஞாயிற்றுக்கிழமை இரத்ததானம் வழங்கினர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தலைமையில் ஆரம்பமான இரத்ததான நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் இரத்ததானம் வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி அதிகாரி, வைத்தியசாலை தாதிய உத்தியோத்தர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.