நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தவணை வழங்குவது போன்று! பா. உ பா.அரியநேந்திரன்

நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தவணை வழங்குவது போன்று அரசாங்கம் ஏழு மாத காலமாக பத்துச் சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏமாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வா காலத்திலும் சரிää போராட்ட காலத்திலும் சரிää சமாதானம் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையிலும் சரி தமிழர்க்கான தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தாதுää தமிழ் தரப்புக்கள் மீதே நொண்டிச்சாட்டுக்களை தெரிவித்து இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையின் போது அரசாங்கம் விலகிக் கொண்ட வரலாறுகளே உள்ளன.
தமிழ் மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதயசுத்தியுடன் அரசாங்கத்துடன் ஏழு மாத காலமாக பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிக்காட்டவில்லை என குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்ää தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஏமாற்றுவது மட்டுமல்ல இந்தியாவும் சர்வதேசமும் கூட ஏமாற்ற முயல்வதாக தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் இறுதியாக நடைபெற்ற பேர்ச்சுவார்த்தையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளை இரண்டு வாரகாலத்திற்குள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில்ää தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தை நிரந்தரமான இடைநிறுத்தப்படும் என தெரிவித்தார்.

தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என அரசாங்கம் நல்லெண்ணத்துடன் செயற்பட்டிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு நிபந்தனை ஏதும் வழங்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இது அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான சிறந்த ஒரு வாய்ப்பாகும். இதனை அரசாங்கம் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழர்க்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என நினைத்தால் அதற்கான பந்து இலங்கை அரசாங்கத்திடம் உள்ளதுää பெற்றுக் கொடுக்க வேண்டும் என இந்தியா மற்றும் சர்வதேசங்கள்  நினைத்தால் அவர்களிடம் தான் வெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.